ADDED : பிப் 15, 2024 06:28 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான நேற்று, கடலுாரில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்து எழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இந்தாண்டிற்கான தவக்காலம் நேற்று துவங்கியது.
முதல் நாளான, சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கடலுார் மஞ்சக்குப்பம் சகாய அன்னை ஆலயம், கார்மேல் அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்ளிட்ட மாநகராட்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
