தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் தபால் நிலையத்தில் உதவி போஸ்ட் மாஸ்டர் தற்கொலை

கடலுார் தபால் நிலையத்தில் உதவி போஸ்ட் மாஸ்டர் தற்கொலை

கடலுார் தபால் நிலையத்தில் உதவி போஸ்ட் மாஸ்டர் தற்கொலை


ADDED : மார் 05, 2024 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில், உதவி போஸ்ட் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலுார் மாவட்டம், வரதராஜன்பேட்டை அடுத்த பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன், 55; கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தலைமை அலுவலகம் பின்புறம் உள்ள தங்கும் அறையில் தங்கியிருந்தார்.

தபால் அலுவலகத்தில் நேற்று இரவு நீண்ட நேரம் வரையில் பணி செய்த கண்ணன், விஷம் குடித்து மயங்கியுள்ளார்.

அலுவலக வாட்ச்மேன் பார்த்து அதிர்ச்சி அடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு, நேற்று காலை கண்ணன் இறந்தார்.

இவர், குடும்ப செலவிற்கு தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்ததாகவும், மாத தவணை அதிகமாக செலுத்துவதால் பிற செலவிற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக கண்ணன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மகன் நந்தகுமார், 26; கொடுத்த புகாரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us