ADDED : பிப் 01, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
கடலுார்: ஜோதிட கலைஞர்கள் தங்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய ஜோதிடர்கள் நலக்கூட்டமைப்பு சேர்மன் வர்மா அறிக்கை:
ஜோதிட கலைஞர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கற்று தெளிவு பெறும் வகையில் பாடபுத்தகத்தில் ஜோதிட சாஸ்திரம் தொடர்பான பாடம் இடம் பெற செய்ய வேண்டும்.
ஜோதிட கலைஞர்களை அரசு நலவாரியத்தில் பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
