ADDED : செப் 12, 2026 07:02 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் முதுநகர் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் எஸ்.பி., நேரில் சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா, மாலை நேரங்களில் மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை தீர்க்கவும், இரவு ரோந்து பணியையும் மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலுார் முதுநகர் பகுதியில் போலீசாரின் ரோந்து பணியை எஸ்.பி., விவேகானந்தா சுக்லா ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதுநகர் ரயில் நிலையம் பகுதியில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து, போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
