/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.50 ஆயிரம் அபேஸ்
/
ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.50 ஆயிரம் அபேஸ்
ADDED : டிச 07, 2024 07:35 AM
சின்னசேலம்; ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பூண்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சக்திவேல், 38; இவர் கடந்த 5ம் தேதி பிற்பகல் சின்னசேலத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றவர், அங்கிருந்த நபரிடம் தனது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.
அந்த நபர், ஏ.டி.எம்., கார்டை இயந்திரத்திப் போட்டு, பணம் இல்லை எனக் கூறி கார்டை மாற்றி கொடுத்துள்ளார்.
சற்று நேரத்தில், சக்தவேல் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் வீதம் 5 முறை எடுத்ததாக மொபைல் போனில் மெசேஜ் வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் போரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி நபரை தேடிவருகின்றனர்.