தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருமகன் மீது தாக்குதல்

மருமகன் மீது தாக்குதல்

மருமகன் மீது தாக்குதல்


ADDED : மே 01, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : மருமகனை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குழந்தைக்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை,45; இவர், தனது மனைவி ஜெயந்தியை வேலைக்கு செல்லக்கூடாது என கூறினார்.

ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தியின் தந்தை வனராஜன், தாய் அன்பழகி ஆகியோர் ஏழுமலையை ஆபாசமாக திட்டி கத்தியால் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வனராஜன், அன்பழகி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us