UPDATED : நவ 12, 2026 05:27 PM
ADDED : நவ 12, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: லாரி டிரைவரை தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்,33; லாரி டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரைக்கும், இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.
இதன்காரணமாக கடந்த 10ம் தேதி மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, ராம்குமாரை, செல்லத்துரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, ராம்குமார் கொடுத்த புகாரின்பேரில், மருதுார் போலீசார் வழக்கு பதிந்து, செல்லத்துரையை, 30; கைது செய்தனர்.
