/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.சி.டிவி., கேமராவை சேதப்படுத்தி திருட முயற்சி : 3 பெண்கள் கைது
/
சி.சி.டிவி., கேமராவை சேதப்படுத்தி திருட முயற்சி : 3 பெண்கள் கைது
சி.சி.டிவி., கேமராவை சேதப்படுத்தி திருட முயற்சி : 3 பெண்கள் கைது
சி.சி.டிவி., கேமராவை சேதப்படுத்தி திருட முயற்சி : 3 பெண்கள் கைது
ADDED : ஏப் 14, 2025 11:51 PM
பண்ருட்டி, ; படுத்தி திருட முயற்சி செய்த 3 பெண்களை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை சித்திரைசாவடியில் முருகன்,52; என்பவர் சிமெண்ட் கல் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1:00 மணியளவில் அவர் கம்பெனியை பார்க்க சென்றார். அப்போது 3 பெண்கள் சி.சி.டி.வி.கேமராவை உடைத்து திருட முயற்சித்தனர். தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் திருட முயற்சித்த 3பெண்களை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் 3 பேரும் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம், பெரியாகுறிச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி வடிவு,24; விஜயன் மனைவி ஜோதி,34;லேசம்மாள்,40 ஆகிய மூவர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.