வீட்டுமனையை அபகரிக்க முயற்சி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
வீட்டுமனையை அபகரிக்க முயற்சி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
ADDED : பிப் 26, 2026 04:50 AM
கடலுார்: அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனையை அபகரிக்க முயல்வதாக பாதிக்கப்பட்டவர்கள், எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர்.
பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், வீட்டுமனைப்பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக ராஜேஸ்வரி தரப்பினர் சுத்தம் செய்தனர். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரி, மற்றும் அவரது கணவரை வீடுபுகுந்து தாக்கினர்.
இதில் காயமடைந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நேற்று எஸ்.பி.,அலுவலகத்தில் ராஜேஸ்வரி புகார் தெரிவித்தார். அதேபோல், அப்பகுதியில் அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா பெற்ற பயனாளிகள் கோவிந்தராஜ், சரசு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் இடத்தையும் அதே கும்பல் அபகரிக்க முயல்வதாக எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
