/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி
/
வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி
வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி
வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஆக 18, 2025 11:58 PM

காட்டுமன்னார்கோவில்; வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
காட்டுமன்னார்கோவில் கக்கன் நகர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் மாதவன்,25: வெளிநாட்டில் கேட்டரிங் வேலை செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பினார்.
அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்ற போது, சிலர் தகராறு செய்து தாக்கி னர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், மாதவனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் 10 பேர் நேற்று தெற்கிருப்பு டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் சேர்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த டி.எஸ்.பி., விஜிகுமார், காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மாதவனின் தம்பி மணிமாறன், உறவினர் பாலாஜி ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. போலீசார் தடுத்து அனைவரையும் கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் காட்டுமன்னார்கோவில்-ஓமாம்புலியூர் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.