/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : டிச 31, 2024 05:10 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜனதா, 57; இவர், நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரித்தனர்.
அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் ஜனதா கடன் கொடுத்துள்ளார்.
திருப்பி தராததால் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர், தீக்குளிக்க முயன்ற தாக கூறினார்.
இதையடுத்து, அவரை கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து
போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.