/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
10 வயது சிறுவனை கடத்த முயற்சி; விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு
/
10 வயது சிறுவனை கடத்த முயற்சி; விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு
10 வயது சிறுவனை கடத்த முயற்சி; விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு
10 வயது சிறுவனை கடத்த முயற்சி; விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு
ADDED : மார் 06, 2024 02:52 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே 10 வயது சிறுவனை மர்மநபர்கள் தாக்கி, கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கானதுகண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு 15 மற்றும் 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 11;00 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் பைக்கில், தமிழ்ச்செல்வன் பெட்டிக்கடைக்கு வந்தனர். அப்போது பெட்டிக்கடையில் தமிழ்சசெல்வனின் 10 வயது மகன் இருந்துள்ளான். அவனிடம் இருவரும் வாட்டர் பாட்டில் கேட்டுள்ளனர். சிறுவன் வாட்டர் பாட்டிலை எடுத்து போது, இருவரும் அவனை தாக்கி கடத்தி செல்ல முயன்றனர்.
அப்போது, சிறுவன் கூச்சலிட்டப்படி அவர்களிடமிருந்து தப்பி வீட்டிற்குள் ஓடினான். அப்போது, மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனின் கையில் கிழித்து விட்டு, இருவரும் பைக்கில் தே.கோபுராபுரம் வழியாக தப்பினர்.
உடன், அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டி பிடிக்க பின்தொடர்ந்தும் அவர்கள் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் சிறுவனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், சிறுவனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

