ADDED : மே 15, 2026 04:00 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் அஷ்வந்த், 19; கடந்த 2024ம் ஆண்டில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மீது விருத்தாசலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஜாமினில் வெளிவந்த இவர், அதன்பின் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வீட்டிற்கு வந்த அஷ்வந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் உள்ளிட்ட போலீசார் அஷ்வந்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
