ADDED : நவ 19, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் நடந்தது.
சங்க மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
இதில், குறைந்தபட்சம் ஓய்வூதியம் 6750 அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வுதியமாக வழங்கி, தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.
இலவச மருத்துவ காப்பீடு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

