UPDATED : ஆக 11, 2026 11:34 PM
ADDED : ஆக 11, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
வடலூர்:வடலுாரை புனித நகரமாக அறிவிக்க வேண்டிய அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிறுவன தலைவர் சிகாமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வள்ளலாரின் ஞான பூமியான வடலூரை புனித நகரமாக அறிவிப்பது, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்வது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதல் நிலையில் பாடுவது, தமிழகத்தின் அனைத்து பெட்ரோல் பங்க் பெயர் பலகைகளிலும் முதலில் தமிழில் பெயர் எழுதுவது, மேகதாது அணை கட்ட மத்திய அரசு தடை விதிக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டது.
