ADDED : பிப் 13, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
கடலுார்: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
கடலுார் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று காலை போதைப்பொருள் மற்றும் மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 79 வாகனங்களுக்கான பொது ஏலம் நடந்தது.
அதில் மதுவிலக்கு சம்பந்தப்பட்ட 59 வாகனங்கள், கஞ்சா போதைப்பொருள் வழக்கு சம்பந்தப்பட்ட 16 வாகனங்கள் உள்ளிட்ட 75 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 13 லட்சத்து 24ஆயிரத்து 432 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
