தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை, மங்கலம்பேட்டையில் பிரேமலதா எம்.எல்.ஏ., ஆய்வு 

விருதை, மங்கலம்பேட்டையில் பிரேமலதா எம்.எல்.ஏ., ஆய்வு 

விருதை, மங்கலம்பேட்டையில் பிரேமலதா எம்.எல்.ஏ., ஆய்வு 


ADDED : செப் 25, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை பகுதியில் பிரேமலதா எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்ற கட்டத்தின் தரம் குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, புதிய கட்டடம் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் நாச்சியார்பேட்டை, நாச்சியார் குளத்தில் பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்த பின், சின்னபரூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள், மழையில் நனைந்து முளைத்த நெல்லை காட்டி கதறினர். உடன் அதிகாரிகளை அழைத்த எம்.எல்.ஏ., அனைத்து நெல்லையும் 2 நாளில் கொள்முதல் செய்ய வலியுறுத்தினார்.

எடைச்சித்துார் மற்றும் மங்கலம்பேட்டையில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆய்வின்போது, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார், மாநில செயற்குழு ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், ஜெயராஜ், தனசேகர், முத்து, முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us