/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளருக்கு விருது
/
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளருக்கு விருது
ADDED : பிப் 17, 2024 04:48 AM

கடலுார்,: கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் கணேசனுக்கு திருப்பணி செம்மல் விருது வழங்கப்பட்டது.
கொள்ளிடம் அடுத்த கொன்னக்காட்டுப்படுகை கிராமம் கொன்றை ஆரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தில் கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரி உரிமையாளர் கணேசன் பங்கேற்றார்.
இதனையொட்டியும், அவரின் ஆன்மிக சேவைகளை பாராட்டியும் கடலுாரில் அவருக்கு ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், இக்கோவில் திருப்பணிக்குழுத் தலைவருமான, முத்துக்குமரன், 'திருப்பணி செம்மல்' விருது வழங்கினார்.
பாலாஜி குருக்கள், மண்டலாபி ேஷக பிரசாதம் வழங்கினார்.
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் கணேசன் தாயார் சகுந்தலா சுப்பராயன், மனைவி மாலா, திருப்பணிக்குழு பொருளாளர் ராஜாராமன் உடனிருந்தனர்.