தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : நவ 29, 2025 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் 6 முதல் பிளஸ் 2 வரை முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, வர்த்தக சங்கத் தலைவர் மோகன், சங்க செயலாளர் சேட்டு, ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரசாமி முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.

கல்வியாளர் வீரப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுணா, துணை தலைவர் வகிதாபீ, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலம் டி.இ.ஓ., துரைபாண்டியன் பங்கேற்று, காலாண்டு தேர்வில் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர் கருப்புசாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us