தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது 

நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது 

நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது 


ADDED : நவ 10, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருட்கள் உணவு பரிமாறவும், பொட்டலங்கள் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு, தமிழக அரசின் உ ணவு பாதுகாப்புத்துறையால், 1 லட்சம் ரொக்கத்துடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர் களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய விருதும் வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள வணிகர்கள் வரும் 25ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப் போரின் உணவகங்கள் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தை பி.டி.எப்., வடி வில் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பென்டிரைவ் மூலமாகவோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, இரண்டாம் தளம், கலெக்டர் அலுவலகம் என்ற முகவரியிலும், 0414 2-221081 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us