ADDED : மே 07, 2025 01:22 AM

விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கருவேப்பிலங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெறும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். மகப்பேறுக்கு முன்பும், பின்பும் தாய்மார்கள் பராமரிப்பு குறித்தும், கர்ப்ப கால பராமரிப்பு, தாயின் உடலில் சீரான ரத்த ஓட்டம், சிசு வளர்ச்சி, மன அழுத்தம் தவிர்க்கும் முறைகள், சுகப்பிரசவம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவிகள் நிதிஷா, நித்யா கதிர்செல்வன், நித்யா, நித்யஸ்ரீ, நிவேதா ஜாஸ்மின், நிவேதா, பிரதீபா, பிரணவி ஆகியோருக்கு மருத்துவக் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
