/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்து துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு
/
அனைத்து துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 06, 2025 03:19 AM

கடலுார்: அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கு 'தினமலர்' நாளிதழ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என, எம்.பி., விஷ்ணு பிரசாத் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த, 1951ம் ஆண்டு துவங்கப்பட்டு, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்களால் நாள்தோறும் வாசிக்கப்படும் நாளிதழ் 'தினமலர்'. தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று, இந்தியாவிலே முன்னோடி மாநிலமாக தமிழகம் வருவதற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
அனைத்து துறைகளிலும் அலசி ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்துவது, சமுதாய சீர்திருத்தம், உள்ளூர் அரசியல், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம், விளையாட்டு, சினிமா ஆகியவற்றில் சிறந்த சேவையை செய்து வருகிறது.
'தினமலர்' பவள விழா கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல், சமூக, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டஅனைத்துத் துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு பெருமிதம் அளிக்கிறது.
மேலும், நேர்மை, நம்பிக்கை, நாட்டுப்பற்று ஆகியவற்றை தளமாகக் கொண்டு பத்திரிகை உலகில் 'தினமலர்' நாளிதழ் தனித்துவத்துடன் நிலைத்து நிற்கிறது.