ADDED : டிச 19, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்; நெய்வேலி வட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் வீணங்கேனி தனியார் திருமண மண்டபத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெய்வேலி சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில் வீணங்கேனியில் நடந்த முகாமில் வட்ட சட்டபணிகள் வழக்கறிஞர் தமிழரசன் மூன்றாம் பாலினித்தவர்களுக்கு உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இலவச சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு வழங்கினர். வழக்கறிஞர்கள் ஆஷா, தம்புராஜ், சட்ட தன்னார்வலர் காசிநாதன், நெய்வேலி நுகர்வோர் அமைப்பின் செயலாளர் உன்னிகிருஷ்ணன், மேல்பாப்பனம்பட்டு நுகர்வோர் அமைப்பு தலைவர் ராமசந்திரன், உட்பட பலர் பங்கேற்றனர்.

