ADDED : ஜன 29, 2026 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் கோ.பொன்னேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கருத்தரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் சவுமியா தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., கல்வி குழும செயலர் அனிதா குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தார். இதில், கருத்தரிப்பு பிரச்னைகள் குறித்து ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கப்பட்டது.

