ADDED : ஏப் 09, 2026 05:59 AM

அ நிறம் | அளவு
புவனகிரி: கீரப்பாளையம் கிராம ஊராட்சி சார்பில், ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி செயலாளர் தங்கமுருகவேல் வரவேற்றார். முதுநிலை உதவியாளர் பாலு, கிராம நிர்வாக அலு வலர் அன்புச்செல்வி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ஜெயக்குமாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்து, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரெட்லி (ஆமை) ஓட்டுப்திவு செய்ய அழைப்பது போன்ற வடிவில் ராட்சத பலுான் மூலம் காட்சிப்படுத்தினர். முகாமில் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
