/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலகப் புவி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
உலகப் புவி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உலகப் புவி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உலகப் புவி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 24, 2025 06:58 AM

புவனகிரி; புவனகிரி அடுத்த சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலகப் புவி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலகப் புவி நாளை முன்னிட்டு சொக்கன்கொல்லை கலாம் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள், அம்மன் நர்சரியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புவி வெப்பமயமாதலை குறைக்க மரம் வளர்த்தலே சிறந்த வழி என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அருண்மொழிவர்மன் மற்றும் அருணாசலம், பள்ளி சிறுவர் கலாம் மன்ற உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பள்ளியில் ஐம்பது மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. ஆசிரியை அகிலா நன்றி கூறினார்.