/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு
ADDED : ஆக 11, 2025 07:11 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 1, 601 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி., உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தாண்டு இதுவரை 1,601 இடங்களில் 1,46,245 பேருக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.