குப்பைகளை தரம் பிரித்து வழங்க கெங்கைகொண்டானில் விழிப்புணர்வு
குப்பைகளை தரம் பிரித்து வழங்க கெங்கைகொண்டானில் விழிப்புணர்வு
ADDED : செப் 16, 2026 03:32 PM
மந்தாரக்குப்பம், செப். 17–
குப்பைகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டி கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் படி குப்பைகளை ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என 4 வகையாக பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வீணான காய்கறிகள், டீ, காபிதுாள், முட்டை ஒடுகள், மீதமான உணவு, மாமிசக்கழிவுகளை ஈரக்கழிவுகளிலும், பிளாஸ்டிக் , பாலீதின் பைகள், குளிர்பான பாக்கெட்கள், அட்டை பெட்டி ஆகிய மக்காத குப்பைகள் அனைத்தும் உலர் கழிவுகளிலும், நாப்கின், டயாபர், பேண்டேஜ், மாஸ்க்கள் ஆகியன சுகாதார கழிவுகளிலும், மின்சாதனம், பெயிண்ட், பேட்டரிகள், மின்விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த கண்ணாடி உள்ளிட்ட சிறப்பு கழிவுகளிலும், என 4 வகையான தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் துப்பரவு ஆய்வாளர் முகமது யாசிக், துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
