ADDED : ஏப் 19, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க, மாவட்ட நுகர்வோர் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார்.
நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பாலாஜி, ஆனந்தன், சிவசுப்பிரமணியம், பன்னீர்செல்வம், முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் ஆனந்தன் வரவேற்றார். வி.ஏ.ஒ., பெருமாள், கிராம உதவியாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன் ,லட்சுமிநாராயணன், தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
