ADDED : ஜன 26, 2026 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாநகராட்சி வரி, வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர் சங்கம் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க கவுரவ ஆலோசகர் அருணாசலம், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். கார்மேகவண்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், ராமச்சந்திரன், பாலசுந்தரம், தண்டபாணி, முகுந்தன், கிருஷ்ணகுமார், தங்கதுரை, புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் தலைமை தபால் நிலையம், செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோவில், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு உள்ளிட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

