ADDED : ஜூலை 31, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலையில், என்.எஸ்.எஸ்., சார்பில் தெரு நாய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா வரவேற்றார். துறை தலைவர் கார்த்திக்குமார், புள்ளியியல் துறை தலைவர் விஜயகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தெருநாய்கள் மைய ஒருங்கிணைப்பு அலுவலர் ஜெயப்பிரகாஷ், தெருநாய்கடியை தடுக்கும் வழிமுறைகளை விளக்கினார். பேராசிரியர்கள் இளங்கோவன், ஆறுமுகம், பரஞ்ஜோதி, ஏகாம்பரம், சுபா, சாந்தி, சமூக ஆர்வலர் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் விஜயசங்கர் நன்றி கூறினார்.
