UPDATED : அக் 08, 2026 05:02 PM
ADDED : அக் 08, 2026 04:06 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிங்க பெண் சிறப்பு அதிரடிபடை சார்பில் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரவி வரவேற்றார். பள்ளி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், தேவநாதன் முன்னிலை வகித்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை சப் இன்ஸ்பெக்டர் லிடியாமேரி மாணவிகளிடையே சுய பாதுகாப்பு, சிங்க பெண் அதிரடிபடை உருவாக்கியதன் நோக்கம், செயல்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார்.
தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
