/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2025 12:16 AM

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரியின் போதை தடுப்புக்குழு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், உடற்கல்வி துறை ஆகியன இணைந்து பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேரணிக்கு கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார்.
போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி பேரணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக, மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பேரணியில் துறைத் தலைவர்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்நாதன், தேவநாதன், நூலகர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.