/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலைமகள் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
/
கலைமகள் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 23, 2024 12:07 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலைமகள் பள்ளி மற்றும் கல்விக் குழுமம், காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் நடந்த பேரணிக்கு, கல்வி குழும தாளாளர் பரணிதரன் தலைமை தாங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சிவக்குமார் பேரணியை துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள் மண்வளத்தை காப்பதற்காக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் காஸ்மோ பாலிட்டன் நிர்வாகிகள் மகேஷ்குமார், ரத்ன சபாபதி, ஸ்ரீராம், வித்யாசாகர், ரமேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் சஞ்சய்காந்தி நன்றி கூறினார்.