ADDED : மார் 18, 2026 05:12 AM

கடலுார்: ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
கடலுார் பஸ் நிலையத்தில், சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தொடங் கி வைத்தார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை பொது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணி கடலுார் பஸ் நிலையத்தில் தொடங்கி சொரக்கால்பட்டு வரை நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,புண்ணிய கோட்டி, மகளிர் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
