ADDED : ஏப் 17, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஒட்டளிக்க வலியுறுத்தி ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளி மாணவர்கள் வரும் 23 ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஒட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக சென்றது.
தொடர்ந்து நெய்வேலி வடக்குத்து பகுதிகளில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் சட்டசபை தேர்தலில் உங்கள் ஓட்டினை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100 சதவீதம் ஓட்டுப்பதிவு ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்டி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
