/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறையூர் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
இறையூர் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஏப் 26, 2025 05:50 AM
பெண்ணாடம் : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெண்ணாடம் தொலைக்கல்வி மையம் சார்பில், இறையூர் கனகசபை பள்ளியில் கோடைகால விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.
கோடை காலங்களில் ஏற்படும் சரும பிரச்னைகள், முதியவர்கள், குழந்தைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், கோடையில் சாப்பிட வேண்டிய உணவுகள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியன குறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சுந்தரம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
'கோடை காலங்கள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
விழாவில், மைய பணியாளர்கள் லட்சுமி, அனிதா, சிவசங்கரி, ஆசிரியைகள் சுதந்திரதேவி, அபிராமி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

