sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஜன 14, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: திருச்சி பாரதிதாசன் பல்கலை., பெண்ணாடம், திட்டக்குடி தொலைக்கல்வி மையங்கள் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கண்ணன், செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.

மைய பணியாளர் சுகுணா வரவேற்றார். மைய பணியாளர்கள் லட்சுமி, பரமேஸ்வரி, சிவசங்கரி உட்பட பலர் பங்கேற்றனர்.

குழந்தைகள் நல டாக்டர் சுந்தரம் பங்கேற்று, நம் முன்னோர், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண் டாடினர்.

இன்று பழைய பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக், நைலான் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது. பழைய மெத்தை தலையணை, ரப்பர் டியூப்களை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

அதனால் வரும் போகி பண்டிகையன்று பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காமல் புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மைய மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us