தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கம் 

 விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கம் 

 விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கம் 


ADDED : மார் 12, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கடலுாரில் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி கலெக்டர் அலுவலக பிரதான வாயிலில் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயபுகைப்பட பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஓட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரும் தனது ஓட்டினை, பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிடவும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், துண்டுபிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us