/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
/
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
ADDED : பிப் 18, 2024 12:02 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை சார்பில் இணைய வழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது .
தமிழ்நாடு ஊர்க்காவல் படை சிதம்பரம் டி கம்பெனி மற்றும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே, சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான் தலைமை வகித்தார். ஊர்க்காவல் படை விழுப்புரம் உதவி தளபதி கேதார்நாதன் முன்னிலை வகித்து பேசினார்.
சிதம்பரம் ஊர் காவல்படை படைத்தளபதி வேதரத்தினம் வரவேற்றார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் படை
வீரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலையம், பஸ் நிலையம், மேலவீதி கஞ்சி தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.