ADDED : பிப் 11, 2026 03:40 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், 'வெல்வோம் ஒன்றாக' என்ற தலைப்பில், தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தவிழிப்புணர்வு வீடியோ எல்.இ.டி., மூலம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலர்கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், ஒன்றிய துணை செயலர் அன்பழகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வீரபாண்டியன், சுபாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜீவ்காந்தி, ஒன்றிய தொண்டரணி கோபால், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு லோகநாதன், கிளைசெயலர்கள் வேலுச்சாமி, விஜயன், கொளஞ்சி, சங்கர், குப்புசாமி, கலியபெருமாள் மற்றும் கிளை நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், தொட்டிக்குப்பம், பரவளூர் கிராமங்களில் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
