நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில், தலைமை பிரிவு பொறியாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
தண்டவாளத்திற்கு மஞ்சள், குங்குமம் தடவி, பொறி, சுண்டல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
அப்போது, ரயில் விபத்து, உயிர் சேதமின்றி, நல்ல முறையில் ரயில்கள் இயங்கிட வேண்டி டிராலிக்கு பூஜை போடப்பட்டது. ரயில்வே ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையில் துணை சேர்மன் ராணி தண்டபாணி, கமிஷனர் பானுமதி முன்னிலையில் ஜீப், துாய்மை வாகனங்கள், ஜே.சி.பி., உள்ளிட்ட வாகனங்களுக்கு பூஜை போடப்பட்டது.
ஒன்றிய அலுவலகத் தில் நடந்த விழாவில், பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், துணை பி.டி.ஓ., மணிகண்டன் பங்கேற்றனர்.