ADDED : நவ 17, 2026 04:33 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
அந்த வகையில் கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று (நவ.,17) கடலுார் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர். இதே போன்று மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
