/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை வழங்கிய அய்யப்பன் எம்.எல்.ஏ.,
/
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை வழங்கிய அய்யப்பன் எம்.எல்.ஏ.,
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை வழங்கிய அய்யப்பன் எம்.எல்.ஏ.,
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை வழங்கிய அய்யப்பன் எம்.எல்.ஏ.,
ADDED : டிச 25, 2024 05:19 AM

கடலுார்: பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தனது ஒரு மாத ஊதியத்தை, கொறடாவிடம் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., எம்.எல்.ஏ.,க் கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஊதியத்தை வழங்கி வருகின்றனர். அதன்படி, கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., தனது ஒரு மாத ஊதியத்தை, கொறடா ராமச்சந்திரனிடம் வழங்கினார்.
கடலுார் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கி உள்ளார்.