/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : அக் 26, 2024 06:52 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு, காலாண்டு தேர்வின் தேர்ச்சி சதவீம், முதல் இடை பருவ தேர்ச்சி சதவீதம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். பின், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். அவருடன், தாசில்தார் தனபதி, பி.டி.ஓ., சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் ஜெயசீலன், தலைமை ஆசிரியர் வேல்முருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்திரி உட்பட பலர் உடனிருந்தனர்.