/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாபாஜி 1821ம் ஆண்டு பிறந்த நாள் விழா
/
பாபாஜி 1821ம் ஆண்டு பிறந்த நாள் விழா
ADDED : டிச 15, 2024 08:00 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பாபாஜியின் 1821ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டையில் கி.பி.,203ல் பாபாஜி பிறந்தார். அவர் பிறந்த இடமான சுங்க அலுவலகம் அருகே கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. பாபாவின் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, பாபாஜியின் 1821ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, கோவில்முழுவதும் தோரணங்கள், பூக்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8;45 மணிக்கு பாபாஜிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3:00 மணிக்கு மந்திர யாகம் துவங்கி, மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை, கிரியா பாபாஜி யோகா சங்கத்தினர் செய்திருந்தனர்.