/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி நுழைவு வாயிலில் துர்நாற்றம்
/
மாநகராட்சி நுழைவு வாயிலில் துர்நாற்றம்
ADDED : ஆக 18, 2025 06:21 AM
கடலுார் : கடலுார் மாநகராட்சி நுழைவு வாயிலில் கால்வாய் பெயர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
கடலுார் மாநகராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவரையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் மாநகராட்சி செப்டிங் டேங்க் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. அந்த கால் வாயின் மீது நடைபாதை யில் ஒட்டக்கூடிய டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த டைல்ஸ் ஆங் காங்கே ஒன்றிரண்டு உடைந் திருந்தது. அதனால் அதை முழுவதுமாக உடைத்துவிட்டு புதிய டைல்ஸ் போடுவதற்காக ஏற்கனவே போடப்பட்டிருந்த டைல்சை பெயர்த்து எடுத்தனர். அப்போது மூடப்பட்டிருந்த கால்வாயின் மூடியை பெயர்த்து விட்டனர். இதனால் கால்வாயில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 2 நாட்களாக மாநகராட்சிக்கு உள்ளே செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மாநகரத்தில் உள்ள சுகாதார பிரச்னையை தீர்க்கும் மாநகராட்சி, தன் அலுவலக நுழைவு வாயிலில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீரமைத்தால் தான் மாநகராட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.