ADDED : ஜன 12, 2025 06:58 AM
கடலுார் : பண்ருட்டி தாசில்தார் மற்றும் ஆதிதிராவிட நல தனி தாசில்தாரை கண்டித்து கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுசெயலாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர்கள் பண்ருட்டி வெங்கடேசன், நெய்வேலி வினோத்குமார், குறிஞ்சிப்பாடி பாலாஜி ரத்தினவேல், புவனகிரி தெய்வகுமார், சிதம்பரம் முகேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். கடலுார் தொகுதி தலைவர் பரந்தாமன் வரவேற்றார். மாநில செயலாளர் ஸ்டீபன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் திருமாறன், மாவட்ட தலைவர் தணிகைசெல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பண்ருட்டி தாலுகா, அகரம் ஊராட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை ஒப்படைவுகளை ரத்து செய்ய வேண்டும், அங்குசெட்டிப்பாளையத்தில் இருளர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் அமர்நாத், பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் செல்வக்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.