/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 29, 2024 11:53 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் நாச்சியார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மஞ்சளாடை பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு, நடைபயணமாக திருச்சி சமயபுரம் மாரியம்மனை வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சமயபுரத்து மாரியம்மன கோவிலுக்கு, மஞ்சளாடை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், காலை 10:00 மணியளவில் மணிமுக்தா ஆற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்து ஊர்வலமாக நாச்சியார்பேட்டை அங்காளம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனை நடந்தது. நேற்று (29ம் தேதி) மஞ்சளாடை பக்தர்கள் 5 நாள் நடைபயணம் மேற்கொண்டு, சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க உள்ளனர்.

