ADDED : மார் 15, 2024 12:01 AM

நடுவீரப்பட்டு: கடலுார்-பண்ருட்டி சாலையில் கீழ்அருங்குணம் பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுாரிலிருந்து பாலுார் வழியாக பண்ருட்டிக்கு அதிக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி உள்ளிட்ட பகுதியிலிந்து கடலுார் செல்ல நேரம் குறைவு என்பதால் அதிகளவு வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலையில் பல இடங்களை விட்டு விட்டு சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது.
வானமாதேவி அணைக்கட்டிலிருந்து வானமாதேவி பஸ் நிறுத்தம் வரை சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிக இடங்களில் பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வரும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் இந்த இடத்தில் புதியதாக தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

